NPP - TMVP இரகசிய டீல்! திரிசங்கு நிலையில் சாணக்கியன்
2025 மார்ச் 22 அன்று மட்டக்களப்பில் ஒரு புதிய அரசியல் கூட்டணியின் கீழ் இணைந்து பணியாற்றுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த நடவடிக்கை கிழக்குத் தமிழர் கூட்டணி உருவாவதற்கு வழிவகுத்தது.
தற்போது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் (TMVP) கட்சியின் தலைவராக இருக்கும் பிள்ளையானும், அகில இலங்கை தமிழ் மகா சபையில் இருக்கும் கருணாவும், இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலை இலக்கு வைத்தே இந்த நகர்வை மேற்கொண்டிருந்தனர்.
இலங்கை அரசுடன் அவர்களின் கடந்த கால உறவுகள் மற்றும் இணக்கம் இருந்தபோதிலும், கருணாவும் பிள்ளையானும் இருவருக்குமிடையே பிளவுகள் தோன்றிய நிலையில், இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு இந்த கூட்டணி அமைக்கப்பெற்றது.
இந்த கூட்டணி நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்றிருந்ததோடு கிழக்கின் முக்கிய சபைகளில் தனக்கான ஆசனங்களை தக்கவைத்திருந்தது.
இந்நிலையில் இந்த கூட்டணியானது கிழக்கில், சாணக்கியன் உள்ளிட்ட தமிழரசுக்கட்சி தரப்புக்கு சவாலாக மாறியுள்ளதாக சில கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் தமிழரசுக்கட்சி உள்ளூராட்சி சபைகளை தக்கவைக்க மேற்கொண்டுள்ள நகர்வுகளையும், அதற்கு பிள்ளையான் கருணா கூட்டணி சாவாலாக மாறியுள்ள விடயத்தையும் விரிவாக ஆராய்கிறது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...