ராஜஸ்தான் அணியில் இணையவுள்ள இலங்கை வீரர்
முன்னதாக ஐபிஎல் 2026 தொடரில் இருந்து விலக்கப்பட்ட, காயம் காரணமாக விலகிய சாம் கரனுக்குப் பதிலாக, தசுன் ஷனகாவை வரவிருக்கும் சீசனுக்காக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ஒப்பந்தம் செய்ய உள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரில் லாகூர் கலாண்டர்ஸ் (Lahore Qalandars) அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியிருந்த இலங்கை நட்சத்திர வீரர் தசுன் ஷானக்க, தற்போது அந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
தசுன் ஷானக்க
இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் சேம் கரன் (Sam Curran) இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் 2026 தொடரில் இருந்து விலக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாம் கரன் ராஜஸ்தான் அணியின் முக்கிய வீரராக இருந்த நிலையில், அவருக்கு நிகரான ஒரு 'fast-bowling all-rounder' ஆக தசுன் ஷானக்க கருதப்படுகிறார்.
சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 31 பந்துகளில் 76 ஓட்டங்களை குவித்து ஷானக்க அதிரடி காட்டினார். இந்த சிறப்பான ஆட்டமே ஐபிஎல் அணிகளின் கவனத்தை அவர் பக்கம் திருப்பியுள்ளது.