பாரத பிரதமர் மோடியை சந்தித்த தமிழர் தரப்பின் வெட்கப்படும் செயல்
கடந்த 04ஆம் திகதி, இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தமிழர் தரப்பு சார்பில் மூன்று பிரதான கட்சியினர் சந்தித்திருந்தனர்.
சந்தித்திருந்தவேளை கடற்றொழிலாளர்களது பிரச்சினை கலந்துரையாடப்பட்டது. எங்கே சென்றாலும் இதைப் பற்றி கதைப்பதில் எவ்வித பலனும் இல்லை. இதைப்பற்றி கதைக்கத்தான் வேண்டும். ஆனாலும், நடக்காத விடயங்களை முன்வைப்பதில் எந்த பயனும் இல்லை.
13ஆவது திருத்தச்சட்டம் அல்லது இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக மக்களது பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும்.
ஆனால் அடைய முடியாத விடயங்களைக் கதைப்பதில் தமிழர் தரப்பு முன்னின்றது.
அநுரவினுடைய கட்சிக்கு தமிழ் மக்கள் ஏன் வாக்களித்தார்கள். தமக்கான அபிவிருத்தியை சிங்கள தேசியக் கட்சியின் ஊடாக பெற்றுக் கொள்ளலாமா என்ற அடிப்படையிலேயே சிந்தித்தார்கள்.
அவர்களுடைய சிந்தனையில் தவறில்லை. ஆனால் இன்று இருக்கக்கூடிய சுமந்திரனாக இருந்தாலும் சரி, கஜேந்திரகுமார் பொன்னம்பலமாக இருந்தாலும் சரி பல தசாப்தங்களாக முன்வைக்கப்படும் பழைய விடயங்களையே திரும்ப திரும்ப முன்வைக்கிறார்கள் என்றும் கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் கிருஷ்ணர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து லங்கா சிறியின் ஊடறுப்பு நிகழ்வில் கலந்து கொண்டு மேலும் தெரிவிக்கையில்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |