நாட்டின் சுகாதாரத்துறை குறித்து வெட்கமடைகின்றேன்!ராஜித சேனாரட்ன
நாட்டின் சுகாதாரத்துறை குறித்து வெட்கமடைவதாக முன்னாள் சுகாதார அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினருமான டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உலக தரத்தில் காணப்பட்ட நாட்டின் சுகாதாரத் துறை இன்று பாரியளவு பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் கொவிட் தடுப்பூசிக்காக உலக நாடுகளிடம் பிச்சை எடுக்கும் நிலைமை உருவாகியுள்ளது எனவும், ஏனைய நாடுகள் தங்களது பிரஜைகளுக்கு தடுப்பூசி ஏற்றி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாம் அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் தாய்,சேய் மரண விகிதம் மிகவும் குறைந்தளவில் காணப்பட்டதாகவும், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு நிகரானதாக காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறையில் நாடு அடைந்திருந்த அபிவிருத்தியை இந்த அரசாங்கம் பின்நோக்கி நகர்த்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam