பொலிஸ் மா அதிபரை கண்டு பிடிக்க முடியாத நிலையில் நாடு: சாகல விசனம்
நாட்டின் பொலிஸ் மா அதிபரை கண்டு பிடிக்க முடியாத நிலையில் நாடு உள்ளது என முன்னாள் அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
தமது வீடு சோதனையிடப்பட்டமை குறித்து ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட போது இதனைத் தெரிவித்துள்ளார்.
“இது முதல் தடவை அல்ல இதற்கு முன்னரும் பீ.பி. ஜெயசுந்தர மற்றும் காமினி செனரத் போன்றவர்கள் இருக்கின்றார்களா என சோதனை மேற்கொள்ளப்பட்டது” என அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து விடயங்களும் கதைகளே
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக தேசபந்து தென்னக்கோனை பொலிஸ் மா அதிபராக பதவியில் அமர்த்துவதற்கு நான் விரும்பவில்லை என குற்றம் சுமத்தப்பட்டது.
அவரை பதவியில் அமர்த்துவதனை நான் காலம் தாழ்த்துவதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும், தற்பொழுது அவர் எனது வீட்டில் மறைந்துள்ளார் என கூறப்படுவதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இந்த அனைத்து விடயங்களும் கதைகளே என அவர் தெரிவித்துள்ளார்.
இழிவான செயல்கள்
பொலிஸ் மா அதிபரை கைது செய்ய முடியாமல் இன்று தடுமாறுகின்றனர் என தெரிவித்துள்ளார்.
தாம் சட்டம் ஒழுங்கு அமைச்சராக கடமை ஆற்றி உள்ளதாகவும், தமக்கும் சட்டம் தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு இழிவான செயல்களை தாம் எப்பொழுதும் செய்தது கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.
வீடு சோதனையிடப்பட்டமை அரசியல் நோக்கில் என சந்தேகிப்பதாக சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பூமிக்குத் திரும்பும் சுனிதாவுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம்? அறிவியலாளர்கள் கூறும் தகவல் News Lankasri

Super Singer: உடனே எனது ஸ்டூடியோவிற்கு வந்திடு... சிறுமிக்கு விருந்தினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி Manithan
