ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதினைப் பெறும் முதல் மேற்கிந்தியத் தீவுகள் வீரர்
ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதினைப் பெறும் முதல் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் எனும் பெருமையை இளம் வேகப் பந்துவீச்சாளர் ஷமர் ஜோசப் பெற்றுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியதால் அவர் இவ்விருதை பெற்றுள்ளார்.
அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஷமர் ஜோசப் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்ய தனது அபார பந்துவீச்சினால் உதவியிருந்தார்.
சிறந்த வீரருக்கான விருது
இந்நிலையில், ஐசிசியின் ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருது ஷமர் ஜோசபிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த ஷமர் ஜோசப்,
உலக அரங்கில் இதுபோன்ற விருதினைப் பெறுவதை மிகவும் சிறப்பானதாக உணர்கிறேன்.

மேற்கிந்தியத் தீவுகள் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய ஒவ்வொரு தருணத்தையும் நான் மகிழ்ச்சியோடு விளையாடினேன்.
அதிலும் குறிப்பாக காபாவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி மிகவும் சிறப்பானதாக அமைந்தது.
மேலும், அணியை வெற்றி பெறச் செய்வதற்கான விக்கெட்களை எடுப்பது மிகவும் சிறப்பானது. உண்மையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியை எனது வாழ்நாளில் மறக்க முடியாது” என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 18 மணி நேரம் முன்
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri