சட்டவிரோதமாக இறக்குமதி செய்ய முயற்சித்த ஆடைகள் சுங்க பிரிவினரால் பறிமுதல்
மலேசியாவில் இருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்ய முயற்சித்த நான்கு கொள்கலன்களில் 160,000 ஆயத்த ஆடைகளை இலங்கை சுங்க வருவாய் கண்காணிப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு நான்கு கொள்கலன்களில் இறக்குமதி செய்ய முயற்சித்த சட்டவிரோத ஆயத்த ஆடைகள் நேற்று(13) கைப்பற்றப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பணிப்பாளர் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
வருமான இழப்பு
இந்நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு கொள்கலன்கலன் தொடர்பில் சுங்கத்துறை விசாரணை நடத்தியதாகவும், பாணந்துறை, வத்தளை மற்றும் கொழும்பு 10 ஆகிய மூன்று முகவர் நிலையங்களினால் இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதன்படி குறித்த நான்கு கொள்கலன்களும் சுங்கத்தால் தவறாக வழிநடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டால், அரசாங்கத்திற்கு ஆறு கோடி ரூபாவுக்கும் அதிகமான சுங்க வருமான இழப்பு ஏற்படும் என தெரிவித்த சுங்கப் பேச்சாளர், இந்த ஆயத்த ஆடைகள் கையிருப்பு குறித்து மேலும் விசாரணை நடத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |