தையிட்டி சம்பவம் மூர்க்கத்தனமானது.. சிறீநேசன் எம்பி கடும் கண்டனம்
தையிட்டியில் நடைபெற்ற சம்பவமானது மிகவும் மூர்க்கத்தனமானதும் கண்டிக்கத்தக்கது எனவும் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
பிக்குகள் எவ்வளவு அட்டகாசம் செய்தாலும் அவர்களுடன் கன்னியமாக நடந்து கொள்ளும் பொலிஸார் இந்து மதகுருவினை நடாத்திய விதம் கண்டிக்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார்.
நேற்று மாலை மட்டக்களப்பு செட்டிப்பாளையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அரசாங்கத்தின் நடவடிக்கை
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முற்போக்கான சில விடயங்களை பாராட்டிக் கொண்டிருக்கும்போது பிற்போக்கான, மூர்க்கத்தனமான, கடந்த ஆட்சிக்காலத்தில் நடந்தது போன்ற விடயங்கள் நடக்கும்போது அதனை நாங்கள் கண்டிக்காமல் இருக்க முடியாது.

இன்று தையிட்டியில் நடைபெற்ற மூர்க்கத்தனமான செயற்பாட்டினை, பலாத்காரமான செயற்பாட்டினை நாங்கள் கண்டிக்கின்றோம். காவியுடை தரித்த இந்து படித்த துறவியினை மிக கேவலமான முறையில் பொலிஸார் நடாத்தியுள்ளனர்.
அதேநேரம் பிக்குகளாக இருந்து எவ்வளவு அட்டகாசம் செய்தாலும் கூட அவர்களை மிக கன்னியமாக அணுகுகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 12 மணி நேரம் முன்
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam