யாழ்ப்பாணத்தில் சைவ சித்தாந்த பட்டப் படிப்புகள் ஆரம்பம்
இந்தியா தமிழ்நாடு மயிலாடுதுறை தருமை ஆதீனம் யாழ்ப்பாண மண்ணில் சைவ சித்தாந்த பட்டப் படிப்புகளை ஆரம்பித்துள்ளது.
சைவ சித்தாந்த கலாநிதி மற்றும் சைவசித்தாந்தப் புலவர், 27 வது நட்சத்திர குருமணி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமி, இந்த தொடக்க விழாவுக்காக இந்தியாவிலிருந்து நேற்று (05.06.2026) பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் வந்துள்ளார்.
முக்கிய சந்திப்பு
இந்த விழா, சைவ பரிபாலன சபையை மையமாகக் கொண்டு, தர்மபுர ஆதீன அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் பட்டப் படிப்புகளை ஆரம்பிப்பதற்காக, மாவிட்டபுரம் சிவபூமி திருக்குறள் வளாக அரண்மனையில் ஊடக சந்திப்புடன் நடைபெற்றது.

இந்த சந்திப்பில், ஆறு திருமுருகன், இலங்கை இந்து மதகுரு பீடத் தலைவர் சிவ ஸ்ரீ வைத்தியஸ்வர குருக்கள், நல்லை ஆதீனத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
விழாவில், திருமுறைகள் உள்ளடங்கிய நூல்கள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. மேலும், நல்லை ஆதீனம் தொடர்பான கருத்துக்களும் வெளிப்படுத்தப்பட்டன.

