இஷாரா செவ்வந்தியின் வழக்கில் தொடரும் சிக்கல் : மீண்டும் பிறப்பிக்கப்பட்ட சிவப்பு அறிவிப்பு
கணேமுல்லை சஞ்சீவ கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷார செவ்வந்தியை மேலும் 90 நாட்கள் தடுத்துவைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு குற்றப்பிரிவு, கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் 23 ஆம் திகதி இந்த அனுமதியை கோரியுள்ளது.
90 நாள் தடுப்புக்காவல் உத்தரவு
சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றப்பிரிவு அளித்த விளக்கத்தைத் தொடர்ந்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபருக்கு எதிரான 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவு 15/01/2026 அன்றுடன் முடிவடைந்தமையினால், மேலும் 90 நாட்களுக்கு தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் எட்டு சந்தேகநபர்கள் வெளிநாடுகளில் இருப்பதாகவும், அவர்களை கைது செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.
சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்க நடவடிக்கை
அதன்படி, 29வது சந்தேகநபரான சம்பத் அஷேன், ஷான் அரோஷ் எனப்படும் மதுகம ஷான், 32வது சந்தேகநபரான படுவந்தே சாமர மற்றும் 33வது சந்தேகநபரான டுபாய் சுத்தா ஆகியோருக்கு சிவப்பு அறிவிப்புகளை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, நான்கு சந்தேகநபர்கள் திறந்த நீதிமன்றத்தில் முன்னிலையான நிலையில், ஏனைய சந்தேகநபர்கள் ஜூம் தொழில்நுட்பம் மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிகாலையில் விபத்தில் சிக்கிய கொழும்பு சென்ற பேருந்து! சாரதியின் சாதுரியத்தால் காப்பாற்றப்பட்ட உயிர்கள்
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri