கிளிநொச்சிக்கு இரவில் அழைத்துச் செல்லப்பட்ட செவ்வந்தி - அழிக்கப்பட்ட CCTV
செவ்வந்தி விவகாரம் மிகப்பெரிய பூதாகரமாகிக் கொண்டிருக்கின்ற நிலையில் தமிழர் பிரதேசங்களில் செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுகளும் விசாரணை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும் குறித்த பகுதியில் உள்ள பொலிஸாருக்கு எந்தவொரு தகவல்களும் அறிவிக்கப்படாமல் கொழும்பில் இருந்து அதற்கென சிறப்பு அணி ஒன்று சென்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த பொலிஸ் பிரிவால் கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் இஷாராவிற்கு தங்குமிடம் வழங்கிய குற்றச்சாட்டில் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையின் போது அங்குள்ள கடைத்தொகுதியில் பதிவான CCTV காணொளியும் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




