வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தீவிர புயல்
வங்காள விரிகுடாவில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (24) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது புயலாக வலுப்பெற்று பங்களாதேஷை நோக்கி நகரக்கூடும் என்று அறிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவியுள்ளது.
இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
மேலும் அதே திசையில் நகர்ந்து நாளை (25) புயலாக உருவாகவுள்ள நிலையில் ‘ரெமல்’ எனப் பெயரிடப்ப்டுள்ளது.
இந்நிலையில், வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதன் எதிரொலியாக தமிழகத்தில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் புதிய சட்டமுன்வரைவு குறித்து வழக்கு தாக்கல்: தேசிய மக்கள் சக்தி எடுத்துள்ள தீர்மானம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

High Voltage Tracks கடந்த வாரம் ஒளிபரப்பான தொடர்களில் TRPயில் மாஸ் காட்டியது எது... டாப் 5 விவரம் இதோ Cineulagam

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri
