நாட்டில் மேலும் சில பகுதிகள் வெள்ள அபாயத்தில்! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை..
நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மிகக் கனமழையால் பல ஆறுகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் (Hydrology & Disaster Management Division) சிவப்பு எச்சரிக்கை ஒன்றை பிறப்பித்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்றுநவம்பர் 27, இரவு 11.30க்கு வெளியிடப்பட்டுள்ளது.
சிவப்பு எச்சரிக்கை
மகாவலி கங்கை, தெதுறு ஓயா, மஹ ஓயா, கலா ஓயா, மாணிக்க கங்கை மற்றும் மல்வத்து ஓயா ஆகிய ஆற்றுப்படுகைகளை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்குக் கிடைக்கும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக அந்தப் பகுதிகளுக்கு கடும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அந்தப் பகுதிகளில் பெய்து வரும் அதிக மழைவீழ்ச்சி மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் பேணப்படும் நீர் அளவீட்டு நிலையங்களின் பெறுமதிகளைக் கருத்தில் கொண்டு, அந்தப் பகுதிகளில் பெரும் வெள்ள நிலைமை மேலும் அதிகரிக்கும்.
எனவே, அந்தப் பகுதிகளில் உள்ள ஆற்றுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்களை இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ள நிலைமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.
ஆற்றின் இருமருங்கிலும் உள்ள தாழ்நிலங்களில் வசிப்பவர்கள் கூடிய விரைவில் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களை அடைவது மிகவும் உகந்தது என்றும் அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam