போக்குவரத்து சபையின் பல தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்
தனியார் பேருந்துகளுடன் கூட்டு நேர அட்டவணையில் பேருந்துகளை இயக்கும் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வேறு சில கோரிக்கைகளை முன்வைத்தும் இலங்கை போக்குவரத்துச் சபையின் பல தொழிற்சங்கங்கள் இன்று(28.08.2025) அதிகாலை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
அதற்கு ஆதரவு தெரிவித்து, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
எனினும், அனைத்து தரப்பினரின் கருத்துக்களின் அடிப்படையிலேயே கூட்டு நேர அட்டவணை தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபால தெரிவித்துள்ளார்.
இடைநிறுத்த நடவடிக்கை
இதேவேளை, இணைந்த நேர அட்டவணை மூலம் அரசு, இலங்கை போக்குவரத்துச் சபையைக் கலைக்க முயற்சிக்கின்றது என்று ஐக்கிய தொழிற்சங்க அழைப்பாளர் ஆனந்த பாலித கூறியுள்ளார்.
இதேவேளை, தொழிற்சங்கங்கள் முன்வைத்த பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கனவே வழங்கப்பட்டிருப்பதால், வேலைநிறுத்தம் நியாயமற்றது என்றும், அரசைச் சிரமப்படுத்தும் ஒரே நோக்கத்துடன் தொழிற்சங்க நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அனைத்து போக்குவரத்து சபை சாரதிகளையும் கடமைக்குச் சமுகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், அவ்வாறு செய்யத் தவறி தொழிற்சங்க நடவடிக்கையில் பங்கேற்பவர்களை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதிப் போக்குவரத்து அமைச்சர் அறிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







அறிவுக்கரசி பொத்தி பொத்தி வைத்த ஈஸ்வரி வீடியோ ஒருவரிடம் சிக்கியது, யாரிடம் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

15 நாள் காதலன் வீட்டிலும், 15 நாள் கணவர் வீட்டிலும்.., மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய கணவர் News Lankasri
