பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் பலருக்கும் இடமாற்றம்
நாட்டின் முக்கிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் பலருக்கும் திடீர் இடமாற்றமொன்று வழங்கப்பட்டுள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பணிப்புரையின் கீழ் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்கள ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அதன் பிரகாரம் 28 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் தாங்கள் பதவி வகித்த இடங்களில் இருந்து வேறு இடங்களுக்கும், வேறு துறைகளுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இடமாற்றம்
அவர்களில் முக்கியமான பொலிஸ் மனித உரிமைகள் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய எச்.ஜீ.எஸ்.பீ.கே.சந்திரசிறி, ருவன்வெல்லை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதே போன்று பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய அபேநாயக்க, கிரிபத்கொடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் தென்னிலங்கையில் கடமையாற்றியவர்கள் வடபகுதிக்கும், கிழக்கில் கடமையாற்றியவர்கள் மேல் மாகாணத்தை அண்டிய பகுதிகளுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
