இஷாரா செவ்வந்தியின் மேலும் பல வங்கிக்கணக்குகள் கண்டுபிடிப்பு
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின் பல வங்கிக்கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். பொதரகம முன்பு நேற்று (06) முன்னிலையான கொழும்பு குற்றப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
பல வங்கிக்கணக்குகள் கண்டுபிடிப்பு
கணெமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் பிரதான சந்தேகநபராக பெயரிடப்பட்டு, மேலும் 90 நாட்களுக்கு விசாரிக்கப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தி என்பவரின் பெயரில் மேலும் பல வங்கிக் கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

எனவே புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த கணக்குகள் குறித்து அறிக்கை கோருவதற்கும், அவற்றை விசாரிப்பதற்கும் சம்பந்தப்பட்ட வங்கிகளை அனுமதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
கணெமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை கோரப்பட்டபோது, மேலதிக விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும் வேளையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தடுப்பு காவலில் இருந்த ஐந்து சந்தேகநபர்கள் ஜூம் தொழில்நுட்பத்தின் மூலம் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளனர்.
ஈரானுக்கு எதிராக அதிநவீன லேசர் தொழில்நுட்பம்: மாற்று திட்டத்தை கையில் எடுத்த அமெரிக்கா News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri