ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்படவுள்ள இராணுவத்தினர் - ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கான விஜயத்தின் போது அங்கு வாழும் இலங்கை மக்கள் மத்தியில் உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணையில் ஏற்பட்ட தாமதம் குறித்து இலங்கையர் ஒருவர் ஜனாதிபதியிடம் குற்றம் சாட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் துறை
2019ஆம் ஆண்டு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது, குற்றப் புலனாய்வுத் துறையில் 500 பதவிகள் மாற்றப்பட்டன.
விசாரணைக்குப் பொறுப்பான முன்னாள் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். விசாரணைக்கு பொறுப்பான அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டனர்.
தடைகள் இருந்தபோதிலும், விசாரணை செயல்முறை முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இராணுவ அதிகாரிகள் கைது
அதற்கமைய, சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் பலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் நாட்களில் பல இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட உள்ளனர்.
குறிப்பிட்ட காலக்கெடுவை குறிப்பிட முடியாவிட்டாலும், விசாரணைகள் சரியான திசையில் நகர்கின்றன எள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.





மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri

சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam
