கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட பலர் கைது(Photo)
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடு குளம் ஆற்றுப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
விசுவமடு தொட்டியடி 6 ஆம் படைப்பிரிவின் இலங்கை சிங்க பிரிவின் இராணுவ முகாமுக்குக் கிடைத்த தகவலையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களின் 5 உழவு இயந்திரத்துடன், 12 பேர் கைது செய்யப்பட்டு தருமபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரத்திற்கு எந்தவித அனுமதி பாத்திரங்களும் அற்ற நிலையிலும் மணல் அகழ்வுக்கு அனுமதிகள் வழங்கப்படாத இடத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை இவ்வாறு 5 உழவு இயந்திரத்துடன் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவ் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக தருமபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
நம் முன்னேற்றத்தை தடுக்க விரும்புகிறார்கள்; அதற்கு தடைவிதிக்கப்போவதில்லை - ட்ரம்ப் திட்டவட்டம் News Lankasri
இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி - நிபுணர் குழு உறுப்பினர் வெளியிட்ட தகவல் News Lankasri