அரசியல்வாதிகள் உட்பட ஏழு பேருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிப்பு
இரத்தினபுரியில் இரண்டு அரசியல்வாதிகள் உட்பட 7 பேருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1997ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் நாலந்த எல்லாவல படுகொலை செய்யப்பட்டதன் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் வீடுகளை எரித்து சேதப்படுத்தியமை தொடர்பான வழக்கின் தீர்ப்பை இரத்தினபுரி மேல் நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது.
இந்நிலையிலேயே இரண்டு அரசியல்வாதிகள் உட்பட 7 பேருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இரத்தினபுரி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சுதத் திஸாநாயக்க, முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் ரணவக்க களுஆராச்சி உட்பட எழுவருக்கு 5 1/2 வருட கடூழிய சிறைத்தண்டனையும் மேலும் இருவருக்கு 7 1/2 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |