பிறந்து ஏழு வாரங்களேயான சிசு கோவிட் தொற்றினால் உயிரிழப்பு
பிறந்து ஏழு வாரங்களேயான சிசுவொன்று கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொரளை சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவ நிபுணர் ஜி.விஜேசுந்தர தெரிவித்துள்ளார்.
நுரையீரலில் ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த குழந்தைக்கு கோவிட் தொற்றுள்ளமை உறுதியாகியுள்ளது.
இதையடுத்து, மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்ததுடன், பின்னர் பொரளை சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.
இதேவேளை, குறித்த குழந்தையின் தாய்க்கும் கோவிட் தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளதாக பொரளை சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 33 நிமிடங்கள் முன்

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
