அம்பாறையில் பொலிஸாரின் அதிரடி சோதனை.. 7 சந்தேக நபர்கள் கைது
அம்பாறை பிரதேச குற்ற மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் சோதன நடவடிக்கைகளின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உஹன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் 8000 மில்லிகிராம் ஹெரோயினுடன் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
திஸ்ஸபுர பாலம் கடௌரா சந்தி அருகில் 2,800 மில்லிகிராம் ஹெரோயினுடன் 21 வயது இளைஞன் கைது செய்யப்பட்டார்.
சோதனை நடவடிக்கை
பாலம் கண்டுவ பகுதி மின்மாற்றி அருகே ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டு வந்த சமனபெட்டாவைச் சேர்ந்த நபர் 3000 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டார்.

பிரிட்ஜ் கேம்ப் பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபர் 2,200 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட மூவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உஹன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
உஹன சோதனையை முடித்துவிட்டு பொலிஸார் திரும்பியபோது, கரங்கவா கிராமத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நால்வரைச் சோதனையிட்டனர்.
இதன்போது அவர்களிடம் இருந்து முறையே 100, 110, 90 மற்றும் 95 மில்லிகிராம் வீதம் மொத்தம் 395 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.
அம்பாறை நகரைச் சேர்ந்த இந்த நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு, மேலதிக நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக அம்பாறை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri