சேவைக்கு தயாரான 7 கடற்படை அதிகாரிகளின் தேர்ச்சி அணிவகுப்பு
அடிப்படை நோக்குநிலை பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த 07 கடற்படை அதிகாரிகளின் தேர்ச்சி அணிவகுப்பு திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று (04.05.2024) திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்வியகத்தின் (NMA) பிரதான அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்றுள்ளது.
தேர்ச்சி அணிவகுப்பு
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கொமடோர் புத்திக லியனகமகே கலந்து கொண்டுள்ளார்.
இதன்போது 05 வைத்திய அதிகாரிகள், 01 பல் வைத்திய அதிகாரி மற்றும் 01 மின் உத்தியோகத்தர் ஆகியயோர் அடிப்படை நோக்குநிலைப் பாடநெறியைப் பின்தொடர்ந்து, பயிற்சியை நிறைவுசெய்த பெருமையுடனும் அணிவகுத்துச் சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து உரையாற்றிய பிரதம அதிதி அவர்களின் சாதனைகளை பாராட்டியதுடன், உன்னதமான தொழிலில் இணைந்த தமது மகன்கள் மற்றும் மகள்களுக்கு சம்மதம் வழங்கிய அதிகாரிகளின் பெற்றோருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
மேலும் இந்நிகழ்வில் கிழக்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகள் குழு, சித்தியடைந்த அதிகாரிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |