ஓட்டமாவடியில் நான்காவது நாளாகவும் ஏழு ஜனாஸாக்கள் நல்லடக்கம்
கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்கள் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் நல்லடக்கம் செய்யும் நிகழ்வு இன்று நான்காவது நாளாகவும் இடம்பெற்றுள்ளது.
இன்று மதியம் 05 மணிவரை ஏழு ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா தெரிவித்துள்ளார்.
இதில் ஆறு ஆண்களும், ஒரு பெண்ணுமாக ஏழு ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் பேலியகொடை, மட்டக்குளி, மல்வானை, ஹ_னுபிட்டி,களனி, குருணாகல் ஆகிய பிரதேசங்களில் இருந்து தலா ஒருவரது ஜனாஸாவும், திஹாரி பிரதேசத்தை சேர்ந்த இரண்டு ஜனாஸாக்களும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய நான்கு தினங்களில் முப்பத்தொரு (31) ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் வீ.தவராஜா மேலும் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 7