பொலிஸ் தலைமையகத்தின் சிசிரிவி கெமராக்கள் மாயம்
கொழும்பு (Colombo) கோட்டையில் உள்ள பழைய பொலிஸ் தலைமையகத்தில் பொருத்தப்பட்ட ஏழு சிசிரிவி கெமராக்கள் காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
தற்போது கொம்பனி வீதியில் உள்ள பழைய விமானப்படை தளத்தில் இயங்கும் பொலிஸ் தலைமையகம், இந்த காணாமல் போன சிசிரிவி தொடர்பாக, கோட்டை பொலிஸில் முறைப்பாட்டை செய்துள்ளது.
முறைப்பாடு பதிவு
தகவல்களின்படி, பழைய பொலிஸ் தலைமையக கட்டிடத்தின் 5ஆவது மாடியில் சிசிரிவி கெமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவை காணாமல் போன சரியான காலம் தெளிவாகத் தெரியவில்லை.
எனினும், பொலிஸ் தலைமையகம் அதன் புதிய வளாகத்திற்கு மாற்றப்பட்ட பின்னரே இந்த கெமராக்கள் காணாமல் போயிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அதேவேளை, காணாமல் போயுள்ள கெமராக்களின் மொத்த மதிப்பு தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |