இஸ்ரேல் தேர்தலில் நெதன்யாகுவுக்கு பின்னடைவு - அரசியல் நிபுணர்கள் எச்சரிக்கை
2023ஆம் ஆண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்குப் பின்னர், நடக்கும் இரண்டாவது பொதுத்தேர்தலில், 20 ஆண்டுகளாக பிரதமராக இருந்து வரும் நெதன்யாகு பின்னடைவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக் கணிப்புகளின்படி, முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசென்கோட் (Gadi Eisenkot) தலைமையிலான எதிர்க்கட்சிகளின் "மாற்றத்திற்கான கூட்டணி" (Yashar கட்சி) அதிக இடங்களைக் கைப்பற்றும் எனக் கணிக்கப்பட்டுள்ள போதிலும், ஆட்சியமைக்கத் தேவையான 61 இடங்களின் பெரும்பான்மையைப் பெறவில்லை.
தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் “லிகூட் (Likud)” கட்சி தனிப்பட்ட முறையில் அதிக இடங்களை வெல்லும் பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது இந்த தேர்தலில் 77.7% வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், இது 1999 ஆம் ஆண்டிற்குப் பின்னர் பதிவான மிக உயர்ந்த வாக்குப்பதிவு சதவிகிதமாக பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நெதன்யாகுவுக்கு எதிராக நடக்கும் வாக்கெடுப்பு
தேர்தலில் அரபு வாக்காளர்களின் ஆதரவு பெருமளவில் அதிகரித்துள்ளதால், அரபு சமூகக் கட்சிகள் (Ra’am மற்றும் Joint List) வரலாற்றுச் சாதனையாக 17 முதல் 18 இடங்கள் வரை கைப்பற்றக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசு அமைவதில் இவர்கள் தீர்க்கமான சக்தியாக இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேல் மக்கள் நெதன்யாகுவின் ஆட்சிக்கெதிராக வாக்களித்துள்ளதாகவும், மக்கள் விருப்பப்படி புதிய அரசை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்போவதாகவும், முன்னாள் இராணுவ தளபதி காடி ஐசென்கோட் தெரிவித்துள்ளார்.
எனினும், நெதன்யாகுவின் கட்சி தான் மிகப்பெரிய தனிப்பெரும் கட்சியாக உள்ளதால் எதிர்க்கட்சிகளின் கொண்டாட்டங்கள் அவசரமானவை என வெளியுறவு அமைச்சர் கிதியோன் சார் தெரிவித்துள்ளார்.
BMW வாகன வழக்கில் முக்கியத் திருப்பம்: நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை ஏற்றுகொண்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ