பாதுகாப்பு பிரதானிகளின் சேவைக் காலம் குறித்து ரணிலின் தீர்மானம்
அனைத்து பாதுகாப்பு பிரதானிகளின் சேவைக் காலத்தையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் இறுதி வரை நீடிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் முடிவடையும் வரை நாட்டின் பாதுகாப்பு வேலைத்திட்டத்தை இலகுவாக பேணுவதற்கு ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
இதற்கமைய, ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தின் அடிப்படையில் பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, குறித்த தீர்மானத்திற்கமைய, டிசம்பர் மாதத்திற்கு முன்னர் சேவைக் காலம் முடிவடையவுள்ள முப்படைத் தளபதிகள் மற்றும் அனைத்து பாதுகாப்பு பிரதானிகளும் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை பதவியில் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
