யாழ்-சென்னை விமான சேவை..! இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை(Photos)
இலங்கை மற்றும் இந்தியா இடையே சேவையில் ஈடுபடும் அலையன்ஸ் எயார் விமானம் நூறாவது தடவையாக சேவையில் ஈடுபட்டுள்ளது.
இதன் மூலம் 10,500க்கும் மேற்பட்ட
பயணிகள் பயனடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையேயான அலையன்ஸ் எயர் மூலம் இயக்கப்படும் 100 வது விமானச் சேவை இன்று முன்னெடுக்கப்பட்டது.
கோவிட் தொற்றுநோய் இடர்காலத்தில் இடைநிறுத்தத்திற்கு பிறகு விமான சேவை 12 டிசம்பர் 2022 அன்று மீண்டும் தொடங்கியது.
இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையிலான மக்கள் உறவு
இந்த வழித்தடத்திற்கு இடையேயான இருவழி பயணிகள் போக்குவரத்து டிசம்பர் 12 இல் இருந்து இன்றுவரை மொத்தம் 10,500 க்கும் அதிகமாக உள்ளது.
இந்திய தூதரகத்தின் அறிக்கையில், இச்செயற்பாடானது இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையிலான மக்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.
அத்துடன் அதிகரித்த இணைப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பது மட்டுமன்றி சுற்றுலாப் பயணிகளின் வருகையைத் தூண்டி இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் வாரத்தில் 4 தடவை இடம்பெற்றுவரும் சேவையை 7 தடவையாக அதிகரிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |










Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
