குருந்தூர்மலையில் திடீரென இரவோடு இரவாக பிரித்ஓதி வழிபாடுகளில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் (PHOTOS)
முல்லைத்தீவு - குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைக்கு நேற்றிரவு (05) வனஜீவராசிகள்
மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க மற்றும் இராஜாங்க அமைச்சர்
பேராசிரியர் சன்ன ஜனசுமன ஆகியோர் 40 க்கும் மேற்பட்ட பௌத்த
பிக்குகளுடன் இணைந்து திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது,ஹெப்பத்திகொல்லாவ ,புல்மோட்டை அரிசிமலை ,மணலாறு பகுதிகளிலிருந்து வருகைதந்த 40 க்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகள் தொல்லியல் அகழ்வு இடம்பெற்றுவரும் இடத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வரும் விகாரையில் பிரித்ஓதல் மேற்கொண்டு அமைச்சர்களோடு இணைந்து வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து முல்லைத்தீவு வட்டுவாகலில் 617 ஏக்கர் மக்களின் காணிகளில் அமைக்கப்பட்டுள்ள கடற்படை முகாமில் இரவு தங்கியிருந்து அமைச்சர்கள் இருவரும் இன்று அதிகாலை புறப்பட்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சுதந்திர நாளான 04 ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் ,சிவஞானம் ஸ்ரீதரன்,இரா .சாணக்கியன் உள்ளிட்டோர் குருந்தூர் மலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.











விஜய் டிவியின் நீ நான் காதல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபலம்... யார் அவர், வீடியோ பாருங்க Cineulagam

Serial update: அத்துமீறிய அறிவுக்கரசி.. கழுத்தை நெறித்தப்படி எச்சரித்த அதிகாரி- தர்ஷன் மாட்டுவாரா? Manithan

Super Singer: பாதியில் பாடலை நிறுத்திய சிறுமி.... அதிருப்தியில் அரங்கம்! நடுவர்களின் முடிவு என்ன? Manithan
