இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கரை சந்தித்த கிழக்கு ஆளுநர்
உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கரை(S. Jaishankar) கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்(Senthil Thondaman) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பு இன்று(20.06.2024) இடம்பெற்றுள்ளது.
கலந்துரையாடல்
இதன்போது, எதிர்கால திட்டங்கள் மற்றும் தற்போதைய நிலவரம் மற்றும் இந்திய வீட்டு திட்டம், மலையகத்துக்கான ஆன்மீக சுற்றுலா உட்பட மேலும் பல விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்களுக்கு தேவையான உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இ.தொ.கா. பிரதிநிதிகளிடம் கூறியுள்ளார்.
இதேவேளை, மலையக மக்களுக்காக இந்தியாவால் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்களை நினைவுகூர்ந்த வெளிவிவகார அமைச்சர், எதிர்காலத்திலும் உதவிகள் தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த சந்திப்பில் , ஜீவன் தொண்டமான், ஏ.அரவிந்த் குமார், எம்.ராமேஸ்வரன், வி.ராதாகிருஷ்ணன், வேலு குமார், உதயகுமார் மற்றும் வடிவேல் சுரேஷ் ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
