சிறுநீரக நோயாளர்களுக்கு இயந்தியரங்களை பெற்றுக்கொடுத்த செந்தில் தொண்டமான்
திருகோணமலையில் சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் இயந்திரங்கள் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் முயற்சியில் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு திருகோணமலை ஐ.ஓ.சி தலைமையகத்தில் இடம்பெற்றது.
ஐ.ஓ.சி நிறுவனத்தின் தலைவர் தீபக் தாஸிடம் கிழக்கு மாகாண ஆளுநர் முன்வைத்த கோரிக்கைக்கு அமையவே இந்த சிறுநீரக இயந்திரம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

குறைவடையும் உயிராபத்துக்கள்
இதன்மூலம் கந்தளாய் வைத்தியசாலை மற்றும் பதுளை வைத்தியசாலைக்கு சிறுநீரக சிகிச்சைகளுக்காக செல்லும் நோயாளர்களின் உயிராபத்துகள் எதிர்காலத்தில் குறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் தற்போது சிறுநீரக நோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் இந்த இயந்திரங்கள் உயிரிழப்புகளை குறைவடைய செய்யும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.







TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri