முதலாளிமார் சம்மேளனத்தை கடுமையாக எச்சரித்துள்ள செந்தில் தொண்டமான்
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் சம்பள நிர்ணய சபையில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தைக்கு இறுதி நேரத்தில் முதலாளிமார் சம்மேளனம் வருகை தராது அலட்சியப் போக்கை வெளிப்படுத்தியுள்ளமைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) கடுமையாக கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் சம்பள நிர்ணய சபை ஊடாக தீர்வு எட்டப்படும் நிலையில் இன்று (10.04.2024) இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்கு முதலாளிமார் சம்மேளனம் வருகை தராதமை தொடர்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சம்பள அதிகரிப்பு
மேலும் தெரிவிக்கையில், “அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட சம்பள நிர்ணய சபையிடம் அலட்சிய போக்கை கடைப்பிடிக்கும் முதலாளிமார் சம்மேளனம், தோட்டத்தில் தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளை எவ்வாறு அணுகுவார்கள் என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு.

இதனால்தான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இவர்களுடைய நடவடிக்கைகளுக்கு எதிராக கடும் போக்கை கடைப்பிடிக்கின்றது.
இவர்களுக்கு ஒரு சதவீதமேனும் சம்பள அதிகரிப்பு வழங்குவதில் உடன்பாடு இல்லை.
எனவே, தோட்ட தொழிலாளர்களின் நலன் கருதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக போராட்டம் முன்னெடுக்க தயாராகி வருகிறது” எனவும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri