குறுகிய காலத்தில் பாரிய சேவை: கிழக்கு ஆளுநருக்கு கிடைத்த பாராட்டு
ஆளுநர் செயலகத்திற்கு விஜயம் செய்த பிரதமர் தினேஷ் குணவர்தன, செந்தில் தொண்டமான் முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் குறித்து பாராட்டு தெரிவித்துள்ளாார்.
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை,மட்டக்களப்பு, திருக்கோணமலை ஆகிய மாவட்டங்களின், உணவு பாதுகாப்பு கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக பிரதமர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.
இது தொடர்பில் நேற்று (05.08.2023) ஆளுநர் செயலகத்திற்கு விஜயம் செய்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி திட்டம்
இதன் போது பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக 700 ஆசிரியர் நியமனம்,5000 இளைஞர்களுக்கு தொழில்நுட்ப வேலைவாய்ப்பு, இந்திய அரசிடமிருந்து 2371 மில்லியன் கடனற்ற நிதியுதவி, ஜப்பான் அரசுடன் இணைந்து அருகம்பே திட்டம ஆரம்பித்தல், சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரித்தல், கிழக்கு மாகாணத்திற்கு முதல் முறையாக கோர்டிலா குரூஸ் கப்பலை வரவழைத்தமை போன்ற செயற்பாடுகளை நினைவுப்படுத்தினார்.
மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணி உரிமை பெற்றுக்கொடுத்தமை, பீச்
கிளீனிங் வேலைத்திட்டத்தின் ஊடாக ஐம்பதாயிரம் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள்,ஒரு
இலட்சம் பிளாஸ்டிக் அல்லாத கழிவு பொருட்கள் அகற்றப்பட்டு கடற்கரைகள் சுத்தம்
செய்யப்பட்டமை, சட்ட ஒழுங்கை சீராக செயற்படுத்தல் போன்ற பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை குறுகிய காலத்தில் வெற்றிகரமாக முன்னெடுத்தமைக்கு பாராட்டுக்களை தெரிவித்திருந்தார்.
மேலும் ஆளுநர் மத சார்பற்ற வகையிலும் நியாயமான முடிவுகளை அனைவருக்கும் உதவும் வகையிலும் செயற்படுகிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கருத்து
மேலும் மட்டக்களப்பு மாவட்ட மீளாய்வு கூட்டத்தில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் நியாமான விடயங்கள் புறக்கணிக்கப்பட்டன.
மக்கள் பிரதிநிதியாக குரல் எழுப்பியும் எந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு எட்டப்படவில்லை, ஆனால் ஆளுநராக செந்தில் தொண்டமான் பொறுப்பேற்ற பிறகு, ஓரளவேனும் நியாயமான முறையில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தக்கூடியதாக உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam
