மக்கள் கோரிக்கையை நிறைவேற்றிய ஆளுநர் செந்தில் தொண்டமான்
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கு ஐந்து மாதக் காலத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தை சேர்ந்த மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வீடுகள் இன்றி இன்னல்களுக்கு முகம்கொடுத்து வந்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக அம்பாறை மாவட்ட அரச அதிபர், திருக்கோவில் பிரதேச செயலாளர், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களால் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
மக்களின் கோரிக்கை
இதன்போது அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டு, மக்களின் குறைகளை கேட்டறிந்து கோரிக்கையை ஏற்று ஐந்து மாதக் காலத்திற்குள் அவர்களுக்கான வீடுகளை நிர்மாணித்து மக்களிடம் கையளித்துள்ளார்.

மேலும், திருக்கோவில் மாவட்ட மக்கள் தங்களது கோரிக்கையை குறுகிய காலத்தில் நிறைவேற்றியமைக்காக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் திருக்கோவில் பிரதேச செயலாளருக்கும் தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஒரேயடியில் 48 ஈரானியத் தலைவர்கள், 9 கடற்படைக் கப்பல்கள் துவம்சம்: பெருமை பேசும் ட்ரம்ப் News Lankasri
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri