மலேசிய இந்திய காங்கிரஸின் சேவையை பாராட்டிய ஆளுநர் செந்தில்..!
வெளிநாட்டு வாழ் இந்திய தமிழர்களின் வாழ்வியலை மேம்படுத்துவதில் மலேசிய இந்திய காங்கிரஸ் கடுமையாக உழைத்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) பாராட்டு தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு மலேசியா (Malaysia) சென்றுள்ள கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உட்பட அந்நாட்டின் முக்கிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
மலேசிய இந்திய தமிழர்கள்
கோலாலம்பூரில் உள்ள மலேசிய இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தின் அழைப்பில் அங்கு சென்ற ஆளுநர் செந்தில், மலேசிய மக்களுக்கு மலேசிய இந்திய காங்கிரஸ் வழங்கும் சேவையினால் மிகவும் கவரப்பட்டதாக கூறியுள்ளார்.

மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவர் டான்ஶ்ரீ டத்தோ விக்னேஷரன் மற்றும் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் முருகன் எம்.பி மற்றும் பிற அரசியல் பிரதிநிதிகள் அர்ப்பணிப்புடன் சேவை செய்வதற்காக பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவர் தமது சாதனை புத்தகத்தையும் ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு இதன்போது வழங்கி வைத்தார்.

வெளிநாட்டு வாழ் மலேசிய இந்திய தமிழர்களின் வாழ்வியலை மேம்படுத்துவதில் மலேசிய இந்திய காங்கிரஸ் கடுமையாக உழைத்துள்ளதாகவும் அவர்கள் தங்கள் அர்ப்பணிப்பான சேவைகளை தொடர தமது வாழ்த்துகளை ஆளுநர் செந்தில் தொண்டமான் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 16 மணி நேரம் முன்
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri