தமிழக உணவு, அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்கும்- செந்தில் தொண்டமான் அறிவிப்பு!
9000 மெற்றிக்தொன் அரிசி
இந்திய அரசாங்கத்தின் ஊடாக இலங்கைக்கு அனுப்பப்பட்ட 9000 மெற்றிக்தொன் அரிசி இதுவரை இலங்கையின் பல்வேறு பகுதிகளில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், உரையாற்றிய செந்தில் தொண்டமான், இதுவரை விநியோகிக்கப்பட்ட தமிழ் நாட்டில் இருந்து கிடைத்த உணவுத் தொடர்பில் சில இடங்களில் இருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
இதில் ஹப்புத்தளை, தொட்டிலாகல பிரதேசத்தில் பால் மா விநியோகத்துக்காக 50 ரூபா கோரப்பட்டமை தொடர்பில் விசாரணை ஒன்று கோரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த உணவு பொருட்களை இந்திய அரசாங்கம் கொழும்பு துறைமுகம் வரையில் எடுத்து வந்த பின்னர், இலங்கை திறைசேரி விநியோகத்துக்காக 400 மில்லியன் ரூபாய்களை செலவிடுகிறது.
இந்த விநியோகம் முழுமையாக அரச அதிபரின் கட்டளையின் கீழ் முன்னெடுக்கப்படுகிறது.
பெருந்தோட்டங்களுக்கான விநியோகம்
பெருந்தோட்டங்களுக்கான விநியோகத்தில் தோட்ட முகாமைத்துவங்கள் உதவியளிக்கின்றன.
இதன்போது எரிபொருள் உட்பட்ட பல்வேறு சிரமங்களும் எதிர்கொள்ளப்படுவதாக செந்தில் தொண்டமான் குறிப்பிட்டார்.
தமிழகத்தின் இந்த உதவிப்பொருட்கள், இலங்கையின் அனைத்து பகுதிகளுக்கும் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக தென்னிலங்கையின் மாத்தறைக்கு விநியோகம் இடம்பெற்றுள்ளது. களுத்துறை பிரதேசத்துக்கான விநியோகம் எதிர்வரும் வாரங்களில் இடம்பெறும் என்றும் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டார்.

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
