முன்னாள் ஆயுத குழு உறுப்பினருக்கு நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தண்டனை!
திருகோணமலையில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுதக் குழு உறுப்பினர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.
குறித்த கொலைக்கு உடந்தையாக இருந்தார் என குற்றம் சுமத்தப்பட்ட இரண்டாவது எதிரி, அரச தரப்பு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்க தவறியமையால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
1995ம் ஆண்டு திருகோணமலை நகரில் உள்ள திரையறங்கு ஒன்றில் இரவு படம் பார்த்துவிட்ட வந்த இளைஞர், திருமலை பகுதியில் வைத்து சுட்டுகொலை செய்யப்பட்டார்.
இரு எதிரிகள் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். 2008ம் ஆண்டு சட்டமா அதிபரினால் திருகோணமலை நீதிமன்றில் இருவருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
எதிரிகள் நீதிமன்றுக்கு வராது தலைமறைவாக இருந்த சூழ்நிலையில், வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த திங்கட் கிழமை இரசாயன பகுப்பாய்வு, கைத்துப்பாக்கி தொடர்பான பகுப்பாய்வு அறிக்கை மன்றில் தாக்கல் செய்து, நிபுணத்துவ சாட்சியம் அளிக்கப்பட்ட பின் வழக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இதனை அடுத்து இன்று திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முதலாம் எதிரியான ஆயுத குழு உறுப்பினரை குற்றவாளி என அறிவித்து ஆயுள் தண்டனை விதித்த தீர்ப்பளித்துள்ளார்.
இரண்டாம் எதிரி, குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
