மத்திய கிழக்கை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள ஹிஸ்புல்லா: ஹமாஸ் தலைவர் தொடர்பில் பரபரப்பு காணொளி
ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் கொல்லப்பட்டமையானது இஸ்ரேலுடனான மோதலை ஒரு புதிய அணுகுமுறைக்கு கொண்டுசெல்லும் என ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரித்துள்ளது.
இஸ்ரேல் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்துவதாகவும், தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கத் தாங்கள் தயாராக உள்ளதாகவும் ஹிஸ்புல்லா அமைப்பு கூறியுள்ளது.
ஹமாஸ் தலைவர்
ஹமாஸ் தலைவர் இறப்பதற்கு சற்று முன்பு இஸ்ரேலின் ஆளில்லா விமானம் அவருக்கு அருகில் பறந்து செல்லும் காணொளியை இஸ்ரேலிய பாதகாப்பு அமைச்சு வெளியிட்டு, அது தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸை பகிரங்கமாக ஆதரிக்கும் ஈரானும் இந்தக் கொலையின் காரணமாக தனது எதிர்ப்பை அதிகரிக்கும் என அச்சமும் வெளியிடப்பட்டுள்ளது.
ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் நேற்று உறுதிப்படுத்தியது.
கட்டிட இடிபாடு ஒன்றில் சின்வாரின் உடல் இருப்பதை இஸ்ரேலிய இராணுவத்தின் ஆளில்லா விமானம் ஒன்று கண்டுபிடித்ததாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு தெரிவித்திருந்தார்.
கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலிலேயே சின்வார் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் சுமார் 1200 பேரைக் கொன்ற அக்டோபர் 7 தாக்குதலை திட்டமிட்டவரின் முக்கிய ஹமாஸ் தலைவராக சின்வார் கருதப்படுகின்றார்.
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தெற்கு காசாவில் உள்ள ரஃபாவில் ஒரு இலக்கு தரை நடவடிக்கையில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரை கொன்றதாக அறிவித்தது.
யஹ்யா சின்வார்
யஹ்யா சின்வார் 1962 இல் தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் அகதிகள் முகாமில் பிறந்தவராவார். இப்பகுதி அப்போது எகிப்திய கட்டுப்பாட்டில் இருந்துள்ளது.
1980 களின் முற்பகுதியில் முஸ்லீம் சகோதரத்துவத்தில் செயல்பட்ட இவர், காசாவில் உள்ள இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவராக இருந்தபோது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்டார்.
ஹமாஸின் உள்நாட்டுப் பாதுகாப்புப் படையான அல் மஜ்தை யஹ்யா சின்வார் நிறுவினார்.
1988 ஆம் ஆண்டில், யஹ்யா சின்வார் 12 பாலஸ்தீனியர்களை கொலை செய்ததற்காகவும் மேலும் இரண்டு இஸ்ரேலிய வீரர்களை கடத்தி கொல்ல திட்டமிட்டதற்காகவும் இஸ்ரேலால் கைது செய்யப்பட்டார்.
யஹ்யா சின்வார் 2011 இல் ஒரு பெரிய கைதி பரிமாற்ற ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக விடுவிக்கப்படுவதற்கு முன்பு பல்வேறு இஸ்ரேலிய சிறைகளில் 22 ஆண்டுகளை கழித்துள்ளார்.
யஹ்யா சின்வார் ஹமாஸில் மீண்டும் 2017 இணைந்தார். மற்றும் காசாவில் ஹமாஸின் தலைவராக இஸ்மாயில் ஹனியேவுக்குப் பின் பதவி உயர்வு தலைவராக இவர் கருதப்படுகின்றார்.
கடந்த மாதம் ஈரானில் இலக்கு வைக்கப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதை அடுத்து, கடந்த ஓகஸ்ட் மாதம் ஹமாஸ் தலைவராக யஹ்யா சின்வார் பதவி உயர்த்தப்பட்டார்.
அக்டோபர் 7 தாக்குதல்
அக்டோபர் 7 தாக்குதலை திட்டமிட்ட இவரை இஸ்ரேல் நீண்டகாலமாக குறித்த தாக்குதலின் மூளையாகக் கருதுகிறது.
மேலும் அவரை "நடமாடும் இறந்த மனிதன்" என்று இஸ்ரேல் குறிப்பிடுகிறது.
காசாவில் நடந்த பேரணியில் இஸ்ரேலுக்கு எதிராக முடிவற்ற ஏவுகணைகளை அனுப்புவதாகவும், வரம்பற்ற வீரர்களின் எண்ணிக்கையை நிலைநிறுத்துவதாகவும் யஹ்யா சின்வார் உறுதியளித்த 2022 டிசம்பரில் இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டது என்று நம்பப்படுகிறது.
அக்டோபர் 7 தாக்குதலில் ஹமாஸ் போராளிகள் குழு இஸ்ரேலிய பாதுகாப்புகளை உடைத்து, 1,200 பேரை கொன்றது மற்றும் 150 க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை பணயக்கைதிகளாக பிடித்தமை இவரின் திட்டமிடலின் அங்கமாகும்.
இஸ்ரேலிய வரலாற்று தாக்குதல்கலால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஹமாஸுக்கு சின்வாரின் மரணம் மிகவும் பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்த மரணமானது ஹமாஸ் அமைப்பின் திட்டமிடல்களுக்கு பின்னடைவாக்க வழிவகுக்கும் என கருதப்படுகிறது.
சின்வாரின் வழிகாட்டுதலின் கீழ், ஹமாஸ் காசாவில் தனது இராணுவ அழுத்தத்தைத் தக்க வைத்துக் கொண்டதாக கருதப்படுகிறது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்
இஸ்ரேலிய இராணுவத்தால் தேடப்படுவதைத் தவிர, சின்வார் 7 அக்டோபர் 2023 முதல் போர்க்குற்றங்களுக்காக கைது செய்வதற்கான பிடியாணைகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர், சின்வாரின் மரணத்திற்கு இங்கிலாந்து "துக்கம் அனுசரிக்காது" என்றும், ஹமாஸ் பிடியில் உள்ள அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், மத்திய கிழக்கில் நிலவும் மோதலை முடிவுக்கு கொண்டு வர, இந்த மரணம் ஒரு "வாய்ப்பு" என தெரிவித்துள்ளார்.
எனினும், இத்தாலியின் பிரதம மந்திரி ஜியோர்ஜியா மெலோனி, இது போரில் ஒரு "புதிய கட்டத்தை" திரந்துள்ளது என கூறியுள்ளார்.
இந்த மோதலில் இதுவரை 42,500 பேர் கொல்லப்பட்டதாகவும், 99,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் ஹமாஸ் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் பொதுமக்கள், போராளிகள் என்ற வேறுபாடு இல்லை என்றும், இன்னும் 101 பணயக்கைதிகள் காஸாவில் இருப்பதாக கருதப்படுகிறது.
இஸ்ரேல் பிரதமர்
ஏழு அமெரிக்க பணயக்கைதிகளின் குடும்பங்கள் கூட்டறிக்கையில், "அனைத்து தரப்பினரும் இந்த வாய்ப்பை உடனடியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றும், தாமதிக்காமல் அவர்களை அழைத்து வர வேண்டும் என்றும“ கூறியுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தனது கருத்துக்களில், இந்த போர் கடினமானது.
மற்றும் இந்த முயற்சி எங்களுக்கு மிகவும் விலை உயர்ந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் எங்களுக்கு தீங்கு விளைவிப்பவர்களுக்கு என்ன நடக்கும் என்பதை இன்று நாங்கள் மீண்டும் தெளிவுபடுத்தினோம் எனவும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |