பொலிஸ் மேல் அதிகாரி ஒருவரின் மோசமான செயல் : விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை
சிலாபம், கரவிடாகார பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரினால் முன்வைக்கப்பட்டிருந்த முறைப்பாட்டுக்கமைய இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் கடந்த வியாழக்கிழமை மாலை வண்ணாத்திவில்லு பொலிஸ் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டிருந்தார்.
புத்தளம் - கபடா மாவத்தையில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஹோட்டலொன்றில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். இவ்வாறு முறைப்பாட்டை முன்வைத்துள்ள பெண் வண்ணாத்தில்லு பிரதேசத்தைச் சேர்ந்த நபரைத் திருமணம் செய்துள்ளதுடன், அதன் பின்னர் ஏற்பட்ட குடும்பப் பிரச்சினையில் குறித்த பெண்ணும் அவரது கணவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இதன் காரணமாகக் கணவருக்கும் மனைவிக்கும் இடையில் தொடர்ச்சியாக முரண்பாட்டு நிலைமை இருந்துவந்துள்ளது. இத்தொடர்பில் வந்த பல்வேறு முறைப்பாடுகள் வண்ணாத்திவில்லு பொலிஸாரினால் விசாரணை செய்யப்பட்டு வந்துள்ளது. ஒரு சந்தர்ப்பத்தில் குறித்த பெண்ணை கைதுசெய்து விளக்கமறியலில் வைக்க வண்ணாத்திவில்லு பொலிஸ் பொறுப்பதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை இணைத்து வருகிறது இவ்வாரத்திற்கான குற்றப்பார்வை தொகுப்பு,

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri
