கிளிநொச்சியை சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் நடராசா கிருஸ்ணகுமார் மரணம்
கிளிநொச்சியை சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் நடராசா கிருஸ்ணகுமார் சுகவீனம் காரணமாக நேற்று (03.07.2025) காலை உயிரிழந்துள்ளார்.
சிறுநீரக நோய்
கிளிநொச்சியை சேர்ந்த நடராசா கிருஸ்ணகுமார், கடந்த 1999ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் வரையும் புலிகளின் குரல் வானொலி வர்த்தக சேவையான தமிழீழ வானொலி ஆகியவற்றின் அலுவலக செய்தியாளராகவும் நிகழ்ச்சிகள் பலவற்றுக்கு குரல் வழங்குபவராகவும் பல்வேறு நெருக்கடிகள் விமானக் குண்டு வீச்சுக்கள் எறிகணை வீச்சுக்கள் என்பனவற்றுக்கு மத்தியில் செய்தி செய்தியாளராக பணியாற்றியவர்.
குறிப்பாக பல்வேறுபட்டவர்களுடைய உறவினையும் தொடர்புகளையும் பேணிய நல்ல ஒரு செய்தி தொடர்பாளராகவும் இருந்த இவர் 2010ஆம் ஆண்டுமுதல் தினக்குரல் வலம்புரி தினகரன் தமிழ்மிரர் உள்ளிட்ட ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியுள்ளார்.
நீண்ட காலம் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு 52ஆவது வயதில் நேற்று காலை உயிரிழந்துள்ளார்.



Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
