சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் பதவியில் மாற்றம்.!
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் புதிய பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படும் சாத்தியம் இருப்பதாக தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் இது குறித்து பிரஸ்தாபித்துள்ளார்.
இது தொடர்பில் உத்தியோகப்பூர்வமற்ற மட்டத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் தேசபந்து தென்னகோன் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தற்போதைய பொலிஸ் மா அதிபர் ஓய்வு
தற்போதைய பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன இம்மாதம் 23ஆம் திகதியுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில் அதற்கடுத்த பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தற்போதைய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களில் வடமேல் மாகாணத்திற்குப் பொறுப்பாக இருக்கும் லலித் பதிநாயக்க, சேவை அடிப்படையில் மூப்பு நிலையில் இருக்கும் நிலையில் அவருக்குப் பதிலாக தேசபந்து தென்னகோன் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam
