ஹார்முஸ் நீரிணைக்கு போர்க் கப்பல்களை அனுப்புங்கள் : உலக நாடுகளுக்கு ட்ரம்ப் வலியுறுத்தல்
ஹார்முஸ் நீரிணையை திறந்து, பாதுகாப்பாக கப்பல்கள் செல்ல போர்க் கப்பல்களை அனுப்புங்கள் என உலக நாடுகளை ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப் கூறியதாவது, ஈரானின் ஹார்முஸ் நீரிணை மூடல் முயற்சியால் பாதிக்கப்பட்ட நாடுகள், அமெரிக்காவுடன் இணைந்து நீரிணையை திறந்து, பாதுகாப்பாக எண்ணெய் கப்பல்கள் கடந்து செல்ல போர்க்கப்பல்களை அனுப்பி வையுங்கள்.
ஈரான் மோசமாகத் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும்
ஈரானின் ராணுவத் திறன் 100 சதவீதம் அழிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஈரான் எவ்வளவு மோசமாகத் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும், இந்த நீர்வழிப்பாதையின் ஏதேனும் ஒரு பகுதியில் ஒன்று அல்லது இரண்டு ஆளில்லா விமானங்களை அனுப்புவதோ, ஒரு கண்ணிவெடியைப் பதிப்பதோ அல்லது ஒரு குறுகிய தூர ஏவுகணையை ஏவுவதோ ஈரானுக்கு மிகவும் எளிதானது.

இந்த செயற்கையான தடையால் பாதிக்கப்பட்ட சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, இங்கிலாந்து மற்றும் பிற நாடுகள், அப்பகுதிக்கு கப்பல்களை அனுப்பி முற்றிலுமாகத் தலை துண்டிக்கப்பட்ட ஒரு தேசத்தால் ஹார்முஸ் நீரிணை இனி அச்சுறுத்தலாக அமையாதவாறு செய்வார்கள் என்று நம்புவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri