அமெரிக்க செனெட்டின் வெளிவிவகார உறவுகளிற்கான குழு இலங்கைக்கு வலியுறுத்தியுள்ள விடயம்
இலங்கை அரசாங்கத்திடம் தேர்தல் தொடர்பில் அமெரிக்க செனெட்டின் வெளிவிவகார உறவுகளிற்கான குழு கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.
அதன்படி சுதந்திரமான நியாயமான உள்ளூராட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அமெரிக்க செனெட்டின் வெளிவிவகார குழு டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.
இலங்கை மக்களின் குரல்கள் ஒலிக்காமலிருப்பதற்காக மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியும், மறுக்க முடியாதபடி ஜனநாயக விரோதமானது என்பதுடன் இலங்கையர்களின் உரிமைகளை நேரடியாக மீறும் செயல் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Any effort to take away the voice of the people of Sri Lanka is undeniably undemocratic & a direct violation of Sri Lankans’ rights. I urge the Government of Sri Lanka to hold free & fair local elections without further delays. https://t.co/n0xyOrmRSe
— Senate Foreign Relations Committee (@SFRCdems) February 28, 2023

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
