அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் : செல்வராசா கஜேந்திரன் வலியுறுத்து

Colombo Selvarajah Kajendren Prisons in Sri Lanka Prison
By Thileepan Apr 17, 2024 01:00 PM GMT
Report

அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் (Selvarajah Kajendran) தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு காெழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரசியல் கைதி செ. ஆனந்தவர்மன் எனப்படும் அரவிந்தனை அவர் நேற்று (16.04) பார்வையிட்டுள்ளார். 

இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இஸ்ரேலின் பதிலடியை எதிர்பார்த்து ஈரானிய கடற்படை மேற்கொண்டுள்ள நடவடிக்கை

இஸ்ரேலின் பதிலடியை எதிர்பார்த்து ஈரானிய கடற்படை மேற்கொண்டுள்ள நடவடிக்கை

பொய் குற்றச்சாட்டு 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”முன்னாள் போராளி செல்வநாயகம் ஆனந்தவர்ணன் கடந்த 2024.03.26இல் கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் விசாரணைக்காக அழைக்கப்பட்டு அன்றைய தினமே கைது செய்யப்பட்டு கொழும்பு வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

selvarasa-requested-to-release-political-suspects-

அவரது முகநூலில் கடந்த 2020இல் ஒரு படமும் 2022இல் ஒருபடமும் பகிரப்பட்டதாகவும் அதன் மூலம் புலிகளை மீளுருவாக்கம் செய்யும் முயற்சி என்ற பொய்க் குற்றச்சாட்டினைச் சுமத்தி அவரைத் தடுத்து வைத்துள்ளனர்.

ஏற்கனவே, அவர் சுமார் 9 ஆண்டுகள் கொடிய சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கும் பல பொய் வழக்குகளுக்கும் முகம் கொடுத்து விடுதலையாகி தனது பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டு கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளார்.

இஸ்ரேலின் பதிலடியை எதிர்பார்த்து ஈரானிய கடற்படை மேற்கொண்டுள்ள நடவடிக்கை

இஸ்ரேலின் பதிலடியை எதிர்பார்த்து ஈரானிய கடற்படை மேற்கொண்டுள்ள நடவடிக்கை

முகநூல் பதிவு  

அடிப்படை வசதிகள் மிகவும் மோசமாகவுள்ள சுமார் 400 பேர் மாத்திரம் அடைக்கப்படக்கூடிய வெலிக்கடை விளக்கமறியல் சிறையில் 2286 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

selvarasa-requested-to-release-political-suspects-

வெலிக்கடைச் சிறைச்சாலையில் அவரைச் சந்தித்து உரையாடியிருந்தேன். சுமார் 3 வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகள் இயக்கச் சீருடையில் உள்ள படத்தை முகநூலில் பகிர்ந்தாகவும் அதன் மூலம் புலிகளை மீளுருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தி தன்னை கைது செய்துள்ளளதாகத் தெரிவித்தார்.

அடுத்த தடவை எப்போது நீதிமன்றில் முற்படுத்துவார்கள் என்ற திகதிகூடத் தெரியாத நிலையில் தன்னைத் தடுத்து வைத்துள்ளதாகவும் கூறினார். தன்னைக் கைது செய்து அடைத்துள்ளமையினால் தனது பிள்ளைகள் அநாதரவான நிலையில் இருப்பதாகவும் தனது விடுதலைக்கு அழுத்தம் கொடுக்குமாறும் மிகுந்த வேதனையுடன் கோரினார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாது : எஸ்.பி. திஸாநாயக்க நம்பிக்கை - செய்திகளின் தொகுப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாது : எஸ்.பி. திஸாநாயக்க நம்பிக்கை - செய்திகளின் தொகுப்பு

 உடன் விடுதலை

கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டம் தமிழர்களது குரல்வளையை நசுக்கி தமிழர்களை தமது கொத்தடிமைகளாக வைத்துக் கொள்வதற்கான எல்லையற்ற அதிகாரத்தை பொலிஸாருக்கு வழங்கியுள்ளது.பொலிஸார் இனவாதமாகவே செயற்படுகின்றார்கள்.

selvarasa-requested-to-release-political-suspects-

மீளுருவாக்கம் என்ற பொய்க்குற்றச்சாட்டுக்களின் கீழ் ஆனந்தவர்ணன் கைது செய்யப்பட்டுள்ளமையை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஆனந்தவர்ணன் உடனடியாக விடுதலை செய்யப்படல் வேண்டும். அத்துடன் கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்படல் வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றோம்.

அச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்படல் வேண்டுமெனவும் கோருகின்றோம்” என வலியுறுத்தியுள்ளார். 

வெளிநாட்டவரை மிரட்டிய கொத்து விற்பனையாளருக்கு நீதிமன்றம் வழங்கிய கடுமையான உத்தரவு

வெளிநாட்டவரை மிரட்டிய கொத்து விற்பனையாளருக்கு நீதிமன்றம் வழங்கிய கடுமையான உத்தரவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US