தமிழர்களின் காணிகள் உடனடியாக விடுவிக்கப்படுகின்ற சூழல் இல்லை: செல்வம் அடைக்கலநாதன்(Video)
குருந்தூர் மலை பகுதியிலுள்ள தமிழ் மக்களினுடைய பூர்வீக காணிகள் உடனடியாக விடுவிக்கப்படுகின்ற ஒரு சூழல் தற்போது இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் குருந்தூர் மலைக்கு இன்று (28.08.2023) விஜயம் செய்திருந்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நிலங்களை விடுவிப்பதற்கான முயற்சி
குருந்தூர்மலை பிரதேசத்திலே வன இலாகா, தொல்லியல் போன்ற ஆளுகைக்குட்பட்ட காணிகளை விடுவிப்பது சம்பந்தமாக கள நிலவரத்தை மேற்கொண்டிருந்தோம்.
குறித்த விஜயத்தை வைத்து பார்க்கின்ற போது உடனடியாக இந்த நிலங்கள் விடுவிக்கப்படுகின்ற ஒரு சூழல் தற்போது இல்லை என தோன்றுகிறது.
மீண்டும் ஜனாதிபதியோடு பேசுகின்ற ஒரு வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும் என்று இங்கு வருகைதந்த உயர் அதிகாரிகள் இந்த விடயம் சம்பந்தமாக கூறியிருக்கிறார்கள்.
நாங்கள் மக்கள் இருந்த பூர்வீக காணிகள் என்று உறுதிபட கூறியிருக்கின்றோம். அதனை ஜனாதிபதியிடமும் எடுத்து கூறி விடுவிப்பதற்கான முயற்சியை மேற்கொள்வோம்.
ஆகவே என்னை பொறுத்தமட்டிலே இது உடனடியாக நடக்குமா? என்று சந்தேகம் இருக்கிறது.” என தெரிவித்துள்ளார்.
தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் தமிழ் மக்களினுடைய பூர்வீக காணிகள் தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த காணிகள் விடுவிப்பது தொடர்பில் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய இன்றையதினம்(28) குறித்த பகுதிக்கு விஜயம் செய்திருந்த முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) க.கனகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) சி.குணபாலன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ம. உமாமகள் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினுடைய மன்னார், வவுனியா ,முல்லைத்தீவு மாவட்டங்களின் உதவிப் பணிப்பாளர் ஆர்.டி.ஜெயதிலக, மாவட்ட வனவள பாதுகாப்பு திணைக்களத்தினுடைய அதிகாரிகள், நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், கமநல சேவை திணைக்கள அதிகாரிகள், நில அளவை திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்கள் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட கிராம மக்கள் சென்று நேரடியாக குறித்த காணிகளை பார்வையிட்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
