அடைக்கலநாதன் - கஜேந்திரகுமார் சந்திப்பு: பேசப்பட்ட விடயங்கள்
ரெலோ கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு, நேற்று (10) செவ்வாய்க்கிழமை இரவு கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில்,
“விசேடமாக அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பை கொண்டு வர உத்தேசித்துள்ள இந்தச் சூழ்நிலையில் குறித்த அரசியல் அமைப்பை உறுதியாக அறிவித்துள்ள நிலையில், அதனை நாடாளுமன்றத்தில் எவ்வாறு எதிர்நோக்கப்போகின்றோம் என்ற விடயம் குறித்து கலந்துரையாடினோம்.
புதிய அரசியல் அமைப்பு
அத்துடன், தமிழ்த் தேசிய மக்களின் நிலைப்பாடுகள் தொடர்பாகவும், புதிய அரசியல் அமைப்பு கொண்டு வரப்படுகின்ற சந்தர்ப்பத்தில் எங்களுடைய நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் கலந்துரையாட இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உள்ளோம்.

நாங்கள் ஏற்கனவே அறிவித்தது போன்று நாடாளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதனுக்கு தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டத்தை மையப்படுத்தி கலந்துரையாடலை நடத்த வேண்டும் என தெரிவித்திருந்தோம்.
மேலதிக நடவடிக்கைகள்
அந்தவகையில், எமது தீர்வு திட்டத்தில் ஒரு பிரதியையும் வழங்கி மேலதிகமாக புது வருடத்தின் பிற்பாடு, மீண்டும் கூடி தமிழ் மக்கள் பேரவையின் யோசனைகளை ஆழமாக ஆராய்வதற்கு நாங்கள் இனங்கியுள்ளோம்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனோடும் இந்த விடயம் தொடர்பாக பேசி புதிய வருடத்தோடு மேலதிக நடவடிக்கைகளையும் முன்னெடுக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
அந்த சந்திப்பு பேரவையினுடைய தீர்வு திட்டத்தை ஆழமாக ஆராய்வதற்கான சந்தர்ப்பத்தை தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் சிவில் சமூக தலைவர்கள் ஆகியோரை உள்வாங்கி மேலதிகமாக இந்த விடயத்தில் உள்வாங்கப்பட வேண்டிய விடயங்களை சிறீதரனுடனும் பேசி முடிவெடுப்போம்” என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri