ஈஸ்டர் தாக்குதலில் கம்மன்பிலவுக்கும் தொடர்பா..! நாடாளுமன்றத்தில் கிளம்பிய சர்ச்சை

Parliament of Sri Lanka Selvam Adaikalanathan Easter Attack Sri Lanka
By Rakesh Jun 27, 2026 05:44 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணி மற்றும் சுரேஷ் சலே தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் போது, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பிலவின் தற்போதைய செயற்பாடுகள் பாரிய சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

"இந்த மகா கொடூரத் தாக்குதலுக்கும் உதய கம்மன்பிலவுக்கும் இடையில் ஏதேனும் மறைமுகத் தொடர்புகள் காணப்படுகின்றனவா? என்ற பலத்த சந்தேகம் மக்கள் மத்தியில் எழுகின்றது. எனவே, அவரை உடனடியாகக் கைது செய்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்" என்றும் அவர் பாதுகாப்புத் தரப்பை வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (26.06.2026) நடைபெற்ற, 'நாட்டின் போதைப்பொருள் அச்சுறுத்தலினை எதிர்த்துப் போராடுதல்' தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சற்றுமுன்னர் வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட இயக்குநர் பாக்யராஜ் உடலம்..! பிற்பகல் நேரில் அஞ்சலி செலுத்தவுள்ள முதலமைச்சர்

சற்றுமுன்னர் வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட இயக்குநர் பாக்யராஜ் உடலம்..! பிற்பகல் நேரில் அஞ்சலி செலுத்தவுள்ள முதலமைச்சர்

போதைப்பொருள் வியாபாரம்

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கடத்தலை தடுப்பதற்காக தற்போதைய அரசு முன்னெடுத்து வரும் காத்திரமான பல விசேட உத்திகளை நாம் மனதார ஆதரிக்கின்றோம்.

இலங்கையில் போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த தமிழ் பேசும் இளைஞர் சமுதாயமே திட்டமிட்டபடி அதிகளவில் இலக்கு வைக்கப்படுகின்றது.

இதனை இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்த வேண்டும், இதற்கு உழைக்கும் பாதுகாப்புத் தரப்பினர் அனைவருக்கும் எமது முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக உள்ளோம்.

இதேவேளை, இலங்கையில் யுத்த காலத்தில் காணாமல்போனோர் விவகாரம் குறித்து பேசிய எமது மதிப்புக்குரிய மறைந்த முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை, சுமார் ஒரு இலட்சத்து 46644 பேர் வரை காணாமல்போயுள்ளனர் என்று அன்று ஆதாரங்களுடன் கூறியிருந்தார்.

ஈஸ்டர் தாக்குதலில் கம்மன்பிலவுக்கும் தொடர்பா..! நாடாளுமன்றத்தில் கிளம்பிய சர்ச்சை | Selvam Aadikalanathan Mp Question In Parliament

அவரின் அந்தத் துணிச்சலான வெளிப்படுத்தலே சர்வதேச ஐக்கிய நாடுகள் சபை வரை சென்று இன்று நீதிக்காக எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது.

தற்போது யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் புதிய மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை சுமார் 409 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்று அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஆயர் அன்று கூறிய எண்ணிக்கையை விடவும் தமிழர்கள் இங்கு கொடூரமாகக் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.

செம்மணி மனிதப் புதைகுழி

உலகிலேயே மனித எலும்புக்கூடுகள் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பகுதியாகச் செம்மணி மாறிக் கொண்டிருக்கின்றது. அங்கிருந்து மீட்கப்படும் பச்சிளம் குழந்தைகளின் எலும்பு எச்சங்களைப் பார்க்கும் போது, அவர்கள் மரணிப்பதற்கு முன்னர் எந்தளவுக்குக் கொடூரமான சித்திரவதைகளை அனுபவித்திருப்பார்கள் என்று நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

இவற்றைச் சர்வதேச தரத்தில் மரபணு பகுப்பாய்வு செய்வதற்கான விஞ்ஞானபூர்வ நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அரசு கூறியுள்ளது, இதனை எவ்வித அரசியல் இழுபறியுமின்றி உடனடியாகச் செய்ய வேண்டும்.

இவற்றுக்கு மத்தியில், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விவகாரத்தில் அரசு விசாரணைகளைத் துரிதப்படுத்த வேண்டும். இந்தத் தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சலே சித்திரவதை செய்யப்படுகின்றார், அவர் சிறைக்குள் உண்ணாவிரதம் இருக்கின்றார் என்றெல்லாம் தற்போதைய சூழலில் பொய்ப் பிரசாரங்கள் கிளம்பும் போது, உதய கம்மன்பில உள்ளிட்ட எதிர்க்கட்சியில் உள்ள சில இனவாதப் புள்ளிகள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் துள்ளிக் குதிக்கின்றனர்.

விஜயதாஸ ராஜபக்சவின் மகனை கைவிட்ட சட்டத்தரணிகள்! காப்பாற்றப்படுவாரா ரகித ராஜபக்ச..!

விஜயதாஸ ராஜபக்சவின் மகனை கைவிட்ட சட்டத்தரணிகள்! காப்பாற்றப்படுவாரா ரகித ராஜபக்ச..!

இந்த விவகாரத்தில் கம்மன்பிலவின் அதீத பதற்றத்தைப் பார்க்கும் போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் அவருக்கும் ஏதேனும் நேரடி அல்லது மறைமுகத் தொடர்பு உள்ளதா? என்ற நியாயமான சந்தேகங்கள் எழுகின்றன.

தான் செய்த பிழையை அல்லது தனக்கு நெருக்கமானவர்களின் தவறைச் சட்டத்தின் முன்னால் மறைப்பதற்காகவே அவர் இவ்வாறு துள்ளுகின்றார். எனவே, பாதுகாப்புத் தரப்பினர் உதய கம்மன்பிலவை உடனடியாகக் கைது செய்து, அவரிடம் முறையான விசாரணைகளை நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US