தந்தை செல்வா நற்பணி மன்ற வெள்ளி விழா! லங்காசிறியின் ஊடகவியலாளர் கௌரவிப்பு.. (Video)
தந்தை செல்வா நற்பணி மன்ற வெள்ளி விழாவை முன்னிட்டு கௌரவிப்பும், மலர் வெளியீடும் இடம்பெறவுள்ளது.
இந்த கௌரவிப்பு விழா நாளை(30) சனிக்கிழமை கொழும்பு விவேனானந்தர் சபை பிரதான மண்டபத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந்த கௌரவிப்பு விழாவில் லங்காசிறியின் ஊடகவியலாளர் டில்சான் வின்ஷன் கௌரவிக்கப்படுவதுடன் மேலும் பலர் கௌரவிக்கப்படவுள்ளனர்.
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் கலந்து சிறப்பிப்பதோடு சிறப்பு விருந்தினராக ஆளுனர் லயன் ஆர்.எல் ராஜ்குமார் கலந்துக்கொள்கின்றார்.
இதேவேளை கௌரவ விருந்தினராக வீரகேசரி பத்திரிகையின் பிரதம செயற்பாட்டு அதிகாரி ஆ.செந்தில் நாதனும், விஷேட அதிதியாக ஜனாதிபதி சட்டத்தரணி தவராஜா.லயன், சு.ஏ.நிமால் செல்வரட்ணம் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இதன்போது அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்குதல், கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் கூடிய புள்ளிகள் எடுத்த மாணவர்களுக்கு பதக்கம் அணிவிக்கும் நிகழ்வும், கண் பரிசோதனை செய்தவர்களுக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வும் நடைபெறுவதோடு மன்றத்தில் சேவை செய்த உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வும் அமரர் பிரதி பொலிஸ்மா அதிபர் அரசரட்ணம் அரங்கில் நடைபெறும்.
கிழக்கு மாகாணம், மலையகம், மற்றைய மாகாணங்கள் இருந்து சுமார் 21 பேர் தந்தை செல்வா விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளார்கள். இவர்களுக்கான கௌரவம் அமரர் பேராசிரியர் சந்திரசேகரன் அரங்கில் நடைபெறவுள்ளது.
இதற்கான ஒழுங்குகளை பொதுச் செயலாளர் எஸ்.கே.தளையரட்ணம், நிர்வாகச் செயலாளர் திருமதி புவனேஸ்வரி ஆகியோர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.