வட பகுதியை இந்திய அரசாங்கத்திற்கு விற்கப் போகிறார்கள்: மொகமட் ஆலம் குற்றச்சாட்டு
"தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் வட பகுதியை இந்திய அரசாங்கம் அபிவிருத்தி செய்வதாககூறி வடபகுதியை இந்திய அரசாங்கத்திற்கு விற்கப் போகிறார்கள்" என மன்னார் மாவட்ட மீனவ சங்க தலைவர் மொகமட் ஆலம் தெரிவித்துள்ளார்,
இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
“இன்று நாட்டில் காணப்படுகின்ற அரசியல் நிலை இதற்கு அப்பால் எரிபொருள் தட்டுப்பாடு கடற்தொழிலாளர்களுக்ககு கிடைக்காமை தொடர்பான பிரச்சினை, மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின்சாரம், அதானி குழு எடுத்துள்ள காற்றாலை மின்சாரத் திட்டம், கனியவள மண் அகழ்வு, மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சமகாலத்தில் சட்டவிரோதமாக செய்யப்படுகின்ற மீன்பிடி முறைகள் மற்றும் வடக்கில் உள்ள கடற்தொழிலாளர் அமைப்புகளை புதுப்பித்தல் போன்ற பல விடயங்களை நாங்கள் பேசியிருக்கிறோம்.
இலங்கையில் அதானி குழு
கடந்த வியாழக்கிழமை ஒரு இந்தியன் குழு ஒன்று மன்னார் மாவட்டத்தில் அதானி குழு முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து சென்றிருக்கின்றது.
எரிபொருள் பெற்றுக்கொள்வது தொடர்பில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை |
தற்போது இலங்கைக்கு இந்தியாவின் எரிபொருள் விநியோகம் வழங்கப்படாது ஆனால்
இந்தியா தற்போதைய நிலையில் எமக்கு உரிய உதவிகளை வழங்கத் தயாரில்லை. ஆனால்
வடபகுதியில் வளங்களை பாவிப்போம் என்பது அவர்களுடைய குறிக்கோளாகக்
காணப்படுகிறது.
ஆனால் தற்பொழுது இலங்கையில் உள்ள வளங்களை சரியாக பயன்படுத்த இலங்கை அரசாங்கத்திற்கு தெரியவில்லை. காலத்துக்கு ஏற்றவாறு எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு எடுக்கப்படாமையினால் நாடு வறுமைக் கோட்டுக்குள் தள்ளப்பட்டடிருக்கிறது,
இந்த அரசாங்கம் நாட்டினை கூறு போட்டு ஒவ்வொரு பகுதியாக விற்றிருக்கின்றது. அதானி என்பவர் இந்தியாவில் பாரியபணம் படைத்த ஒரு பெரிய தொழிலதிபர் அங்கே அவருக்கு நிறைய பிரச்சினைகள் அதாவது அவரால் முன்னெடுக்கப்பட இருக்கின்ற துறைமுக நகரங்கள் கூட ஒரு பிரச்சினையான காணப்படுகிறது.
அவரைக் கொண்டு வந்து வடபகுதியை விற்க போகின்றார்கள் நிச்சயமாக தற்போதுள்ள சூழ்நிலையில் வடபகுதியினை அபிவிருத்தி செய்வதாக கூறி திட்டங்களை நடைமுறைப்படுத்தி இந்தியாவுக்கு வடபகுதியினை விற்க போகின்றார்கள்”என்றார்

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
