எரிபொருள் பெற்றுக்கொள்வது தொடர்பில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை
இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் ஸ்ரீ ஹர்தீப் சிங் பூரியை இன்று சந்தித்து பேசியுள்ளார்.
இருதரப்பு எரிசக்தி ஒத்துழைப்பு தொடர்பான அவசர விடயங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர். புதுதில்லியில் உள்ள வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது பெட்ரோலியப் பொருட்களின் விநியோகம், இலங்கை தற்போது எதிர்நோக்கும் கடுமையான சவால்கள் மற்றும் மக்கள் படும் கடுமையான இன்னல்கள் குறித்து அமைச்சர் பூரிக்கு உயர்ஸ்தானிகர் மொரகொட விளக்கமளித்தார்.
கடன் உதவிக்கு நன்றி தெரிவித்த இலங்கை
எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக இந்தியா வழங்கிய கடன் உதவிக்கு நன்றி தெரிவித்த இலங்கை உயர்ஸ்தானிகர், தற்போது இலங்கைக்குத் தேவையான பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகங்களை அவசரகால அடிப்படையில் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சர் பூரியுடன் கலந்துரையாடியுள்ளார்.
அமைச்சர் பூரி இது தொடர்பாக சாதகமாக பதிலளித்ததுடன், இந்த நெருக்கடியான தருணத்தில் இலங்கைக்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்கும் என உயர் ஸ்தானிகருக்கு உறுதியளித்தார்.
உயர்ஸ்தானிகரும் அமைச்சரும் உடனடி நெருக்கடியை சமாளிக்க உதவுவதற்கும் இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பெட்ரோலிய துறையில் இந்தியாவும் இலங்கையும் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடினர்.
இந்த நிலையில், உயர் ஸ்தானிகர் மொரகொட மற்றும் அமைச்சர் பூரி ஆகியோர் பெட்ரோலியம், எண்ணெய், எரிவாயு மற்றும் தொடர்புடைய தளவாடத் துறைகளில் இலங்கை நீண்டகால உறவுகளை ஏற்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து கலந்துரையாடினர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

எதேச்சியாக பார்த்த ஒரு வீடியோவால் கோடீஸ்வரர் ஆன நபர்! எதிர்பாராமல் பணக்காரனாகி விட்டேன் என ஆச்சரியம் News Lankasri

நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் செளந்தர்யாவுக்கு நடந்த வளைகாப்பு! மகிழ்ச்சியில் குடும்பத்தார் News Lankasri
