இலங்கை சிறுவர்களை வெளிநாடுகளுக்கு விற்கும் வர்த்தகம் இடம்பெறுவதாக தகவல்
இலங்கையைச் சேர்ந்த சிறுவர்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் வர்த்தகம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நபர்கள் இதுவரை சுமார் 11 ஆயிரம் சிறுவர்களை விற்பனை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் குழு ஒன்று இந்த விடயத்தைக் கண்டறிந்துள்ளது. இந்த பிள்ளை பற்றி விசாரணை நடத்துமாறு ஐ.நா குழு சுவிஸர்லாந்து அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன் சுவிஸ் அரசாங்கம் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.
பெண் சட்டத்தரணி ஒருவர் உட்பட சிலர் இந்த வர்த்தகத்துடன் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
சுவிஸர்லாந்து நாட்டில் மாத்திரம் 200க்கும் மேற்பட்ட இலங்கை சிறார்கள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த பிள்ளைகளைத் தத்தெடுத்த சுவிஸ் பிரஜைகள் குறித்தும் விசாரணை நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 9 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
